பெண்கள் வட்டமிட்டு, கும்மி அடித்து நிலா பிள்ளையார் வழிபாடு

சங்ககிரி அருகே பெண்கள் வட்டமிட்டுக் கும்மி அடித்து நிலா பிள்ளையார் வழிபாடு செய்தனர்.;

Update: 2024-01-28 01:23 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவன்னகவுண்டனூர் ஊராட்சி சத்யா நகர் பகுதியில் பெண்கள் ஒன்று கூடி கும்மி அடித்து இரவு நிலா பிள்ளையார் வழிபாடு செய்தனர்... தேவண்ணக்கவுண்டனூர் சுற்றுவட்டார பகுதிகளில் நிலா பிள்ளையாருக்கு கிராமப்புற பெண்கள் ஒன்றுகூடி ஏழு நாள்கள் கிராமிய கும்மி பாட்டு பாடி வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி நிலா பிள்ளையார் வைத்து பெண்கள் கும்மி அடித்தும், மாவிளக்கு தட்டுகளை வைத்தும் பூஜை செய்து வழிப்பட்டனர்.
Tags:    

Similar News