நிறுத்தி வைக்கப்பட்ட சரக்கு லாரி மீது மோதி மஞ்சள் வியாபாரி உயிரிழப்பு
மொரப்பூரில் இருந்து மஞ்சள் முட்டைகளை ஏற்றி வந்த வியாபாரி பனந்தோப்பு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு காவல் துறையினர் விசாரணை
Update: 2024-03-02 07:35 GMT
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள பூச்சட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சள் வியாபாரி லோகநாதன் அவருக்கு வயது 45 இவர் இன்று மோட்டார் சைக்கிள் இரண்டு மஞ்சள் மூட்டைகளை ஏற்றுக் கொண்டு மொரப்பூரிலிருந்து தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்தார் மதிகோன்பாளையம் அடுத்துள்ள பனந்தோப்பு பெட்ரோல் பங்க் அருகில் சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் மீது லோகநாதன் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே லோகநாதன் உயிரிழந்துள்ளார் தகவல் அறிந்து வந்த மதிகோன்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று லோகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.