டெம்போவில் பைக் மோதல் - சிறுவன் உயிரிழப்பு

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;

Update: 2023-12-18 05:21 GMT
சிறுவன் பலி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் ரபீக் என்பவரின் மகன் அர்ஷாத் (16). கடந்த 6-ம் தேதி மாலை தனது சகோதரன் மற்றும் நண்பர் ஒருவருடன் இலுப்பமூடு சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த டெம்போவின் டீசல் டேங்கில் அர்ஷாத் பைக்கை இடித்துள்ளார். இதில் அர்ஷாத் படுகாயம் அடைந்துள்ளார். அவரை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அர்ஷாத் உயிரிழந்தார். இது சம்பந்தமாக கியாஸ் சிலிண்டர் வாகன ஓட்டுனர் விஜு (40) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் அர்ஷாத் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News