மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலி!
கலசப்பாக்கம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-30 13:48 GMT
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த குருவிமலை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32), லாரி உரிமையாளர். இவர் மோட்டார் சைக்கிளில் நாயுடுமங்கலம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.