தர்மபுரியில் இளம் பெண் தற்கொலை

தர்மபுரி எம்ஜிஆர் நகர் பகுதியில் 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-05-15 01:35 GMT

தற்கொலை

தர்மபுரி சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட தர்மபுரி நகராட்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் மேனகா. இவருடைய மகள் கோபிகா இவர் வீட்டில் நேற்று மாலை தூக்குப்போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் கள் பரிசோதித்த கோபிகா ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து தர்மபுரி நகர பி1 காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபிகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News