இளம்பெண் தற்கொலை
திருச்சி மாவட்டம், மேட்டுப்பட்டியில் கடந்த ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேட்டுப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் 28 வயதான விஜயலட்சுமி.இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதற்காக மாத்திரைகளை சாப்பிட்டும் வந்துள்ளார்.
ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை.இந்நிலையில் நேற்று வயிற்று வலி அதிகமாக இருந்ததால் வலி தாங்காமல் தவித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி விஷம் குடித்தார். இதை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து இளம் பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.