குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்

போடிநாயக்கன்பட்டி அருகில் நந்தி நாயக்கனூரை சேர்ந்த சண்முகப்பிரியா, குடும்பத் தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2024-04-12 14:07 GMT

போடிநாயக்கன்பட்டி அருகில் நந்தி நாயக்கனூரை சேர்ந்த சண்முகப்பிரியா, குடும்பத் தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், போடிநாயக்கன்பட்டி அருகில் உள்ள நந்தி நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி சண்முகப்பிரியா வயது 25. இவர் பழனிச்சாமியை இரண்டாவது தரமாக கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் தற்போது கரூர் வெங்கமேடு குமாரப்பா கவுண்டர் தெருவில் வசித்து வந்தார்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தி அடைந்த சண்முகப்பிரியா, ஏப்ரல் 10ம் தேதி இரவு 9.30 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

மறுநாள் நீண்ட நேரமாக சண்முகப்பிரியா கதவை திறக்காததால், வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது, சண்முகப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் சண்முகப்பிரியாவின் தாயார் பழனியம்மாளுக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர், தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பார்த்து கண் கலங்கினார்.

மேலும், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சண்முக பிரியாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags:    

Similar News