இளம்பெண் தற்கொலை 

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-13 13:42 GMT

தற்கொலை 

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கும் தென்காசி மாவட்டம், மன்னார்கோவிலை சேர்ந்த மனிஷா (27) என்பருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போத பத்து மாத பெண் குழந்தை உள்ளது.  பிஎஸ்சி நர்சிங் படித்துள்ள மனிஷா சிறிது காலம் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார்.

குழந்தை பிறந்தவுடன் அவர் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதில் மன வேதனை அடைந்த மனிஷா வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற கணவர் வீட்டுக்கு வந்த போது   மனிஷா தூக்கில் தூங்குவது தெரிய வந்தது.      

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனிஷாவை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது,  அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் கூறினர்.  இது சம்பந்தமாக ஆரல்வாய்மொழி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

போலீசார்  உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆன நிலையில்,  நாகர்கோவில் ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News