கிணற்றில் விழுந்து இளம்பெண் பலி

வந்தவாசி அருகே மாடு இழுத்து சென்றதில் கிணற்றில் விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-30 10:10 GMT

பலி 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மங்க நல்லூர் கிராமத்தை சேர்ந்த திருமுருகன் மகள் தனலட்சுமி (வயது 18), வந்தவாசியில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மாட்டிற்கு தண்ணீர் காட்டிய போது திடீரென மாடு இழுத்துச் சென்றதில் அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்து தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வந்தவாசி வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News