தூசி அருகே இளம்பெண் மாயம்

திருவண்ணாமலை மாவட்டம், தூசி அருகே இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-16 10:06 GMT

இளம் பெண் மாயம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம் பெண் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த பெற்றோர், மகளை பல்வேறு இடங்களில் தேடினர் .

பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால் பெற்றோர் தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் தூசி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News