சேலத்தில் பெண் உள்பட 2 பேரிடம் வழிப்பறி செய்த வாலிபர்கள் கைது

சேலத்தில் பெண் உள்பட 2 பேரிடம் வழிப்பறி செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2024-01-18 15:54 GMT


சேலத்தில் பெண் உள்பட 2 பேரிடம் வழிப்பறி செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


சேலம் அம்மாப்பேட்டை காந்தி மகான் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது30). இவர் அம்மாப்பேட்டை எஸ்.கே. டவுன்சிப் பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணம் பறித்தார். இது குறித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தினார். அதில் சசிகுமாரிடம் பணம் பறித்தது பொன்னம்மாபேட்டையை சேர்ந்த சூர்யா (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதேபோல் மற்றொரு சம்பவம் மணக்காடு கோர்ட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் ஞானதுரை. இவரது மனைவி ரோஸ்லின் (வயது 4 1). இவர் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்தார். இது குறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜான்சன் பேட்டை கண்ணன்காடு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News