வடமாநில காவலாளியை வெட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது

வடமாநில காவலாளியை வெட்டி செல்போனை பறித்த வாலிபரை நெமிலி காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-06-08 08:33 GMT

வடமாநில காவலாளியை வெட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இதற்காக தனியார் கம்பெனி ஒன்று உளியநல்லூர் பகுதியில் முகாம் அமைத்து வடமாநில தொழிலாளர்களை சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உளியநல்லூர் பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படும் தளவாட பொருட்களை பாதுகாக்கும் காவலாளியாக பணிபுரிந்து வரும் பீகாரை சேர்ந்த மனோஜ் பாண்டே (45) என்பவரை மூன்று பேர் கத்தியால் வெட்டிவிட்டு, செல்போன், டீசல், கம்பிகளை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து தனியார் கம்பெனி மேலாளர் சுரேஷ் நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

நேற்று மாலை நெமிலி போலீசார் அகவலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் சோளிங்கரை அடுத்த ஆயல் கிராமத்தை சேர்ந்த சுகுமார் (23) என்பதும், உளியநல்லூரில் வடமாநில காவலாளியை வெட்டி, பொருட்களை திருடிசென்றதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மோடடார்சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News