5 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய வாலிபர் கைது

பெரியாம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் சரக்கு லாரியில் 5 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய வாலிபரை கைது செய்தனர்.

Update: 2024-06-16 06:05 GMT

வாலிபர் கைது

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ் சாலையில் காரிமங்கலம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வேகமாக சென்ற சரக்கு லாரியை நிறுத்தினர்.

அப்போது லாரியில் வந்த டிரை வர் உள்பட 2 பேர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். எனினும் காவலர்கள் துரத்தி சென்று ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் கேத்மாரன அள்ளி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் சரக்கு லாரியில் இருந்த 760 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதுகுறித்து காரிமங்கலம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து லாரி, குட்காவை பறிமுதல் செய்ததுடன், தப்பி ஓடிய கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கே.என்.புரா பகுதியை சேர்ந்த சஷாங் என்பவரை தேடி வருகின்றனர்

Tags:    

Similar News