செல்போனை களவாடிய இளைஞர்கள் கைது
கரூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தவரிடம் செல்போனை களவாடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தவரிடம் செல்போனை களவாடிய இளைஞர்கள் கைது. 6- செல்போன்கள் பறிமுதல். கரூர் ஆண்டாங் கோவில் கீழ்பாகம், பெரிய கோதூர் அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 38. இவர் மே 5-ம் தேதி இரவு 9 :40- மணியளவில், கரூர் பேருந்து நிலையத்தில் ஊருக்கு செல்வதற்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த, கரூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் வயது 22, கரூர், திருமாநிலையூர், முதல் கிழக்கு தெருவை சேர்ந்த கொடி என்கிற கொடியரசு வயது 23 ஆகிய இருவரும் முருகேசன் இடமிருந்து செல்போனை களவாடி சென்றனர்.
இது தொடர்பாக முருகேசன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, பல்வேறு இடங்களில் இதே போன்று செல்போனை களவாடியது தெரியவந்தது. இவ்வாறு களவாடிய மொத்தம் 6- செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த செல்போன்களின் மதிப்பு ரூபாய் 50,000 என மதிப்பீடு செய்த காவல்துறையினர், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல்துறையினர். கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது வேலூர் மாவட்டத்தில் 6- வழக்குகளும், கரூர் மாவட்டத்தில் 7- வழக்குகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.