இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-02-15 06:48 GMT

 காளிதாஸ்

தூத்துக்குடி ஐயப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த சுடலைகுமார் மகன் மகாராஜா (30) என்பவர் கடந்த 11.02.2024 அன்று மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெயராஜ் ரோடு பகுதியில் உள்ள ஒரு மருந்தகம் அருகே நிறுத்திவிட்டு பின்னர் வந்து பார்க்கும் போது அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது. இதுகுறித்து மகாராஜா நேற்று அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி சிலுவைப்பட்டி சுனாமி காலனியைச் சேர்ந்த செந்தில் மகன் காளிதாஸ் (20) என்பவர் மகாராஜாவின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் போலீசார் காளிதாஸை கைது செய்து, அவரிடமிருந்த திருடப்பட்ட ரூ.80ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News