திருட்டில் ஈடுப்பட்ட வாலிபர் கைது
தர்மபுரி நகரப் பகுதியில் துணிக்கடை மற்றும் பாத்திர கடையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திர மாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ரெடிமேட் ஷோரூமில் கடந்த ஆண்டு மேற்கூறையை உடைத்து 6 ஆயிரம் திருடு போனது. மேலும் இதேபோல் தர்மபுரி எஸ்.வி.ரோட்டில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் மேற்கூரையை உடைத்து 1 லட்சத்து 80 ஆயிரம் திருடு போனது. இதுதொடர்பாக தர்மபுரி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே உதவி காவல் ஆய்வாளர் விஜயசங்கர் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்துவந்தது. இந்த திருட்டு வழக்குகளில் துப்பு கிடைத்ததை தொடர்ந்து திருட்டு மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்த ஷேக் அக்ரம் என்பவரை தனிப்படை போலீசார் நேற்று மாலைகைது செய்தனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டவரை கைது செய்த தனிப் படை உதவி காவல் ஆய்வாளர் விஜய சங்கர் மற்றும் சந்திரசேகர்,பிரதாப், கண்ணன்,சின்னசாமி, வெங்கடேசன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் பாராட்டினார்.