தாய் மகன் மீது தாக்குதல் - வாலிபர் கைது

சேலம் மாவட்டம்,, கிச்சிப்பாளையம் பகுதியில் பணம் தராததால் தாய் மகன் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-04-19 02:40 GMT

தாக்குதல் 

சேலம், கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி சாந்தி (வயது 34). இவர்களது மகன் மூர்த்தி. இவர், நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அதேபகுதியை சேர்ந்த அவரது நண்பரான காளிதாஸ் (38) என்பவர் மதுபோதையில் வந்துள்ளார். பின்னர் அவர் மூர்த்தியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தனக்கு பணம் தர வேண்டும் எனக்கூறி தகராறு செய்த காளிதாஸ் கீழே கிடந்த செங்கல்லை எடுத்து மூர்த்தியை தாக்கினார். இதனை பார்த்த சாந்தி ஓடி வந்து தனது மகன் தாக்கப்படுவதை தடுத்தார். அப்போது, சாந்தியையும் காளிதாஸ் சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டார். இந்த தாக்குதலில் தாய், மகன் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் விசாரணை நடத்தி தாய்-மகனை தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவின் கீழ் கூலித்தொழிலாளி காளிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News