சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது
சிவகங்கை அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-04-22 04:34 GMT
சட்டவிரோத மது விற்பனை
சிவகங்கை அருகே பையூர் முந்திரிக்காடு பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக சிவகங்கை நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து சிவகங்கை நகர் காவல்நிலைய உதவி ஆயவாளர் இளையராஜா தலைமையிலான போலீஸார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது கௌரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தானகுமார்(23) என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்