கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம்,மயிலாடி பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்தனர்.;
Update: 2024-03-29 13:30 GMT
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் , மயிலாடி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சாலமன் (வயது 52), தையல்காரர். இவர் நேற்று நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தம்மத்துகோணத்தை சேர்ந்த வீரமணி (22) என்பவர் அவரை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்தார்.
அத்துடன் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 400-ஐ பறித்து சென்றார். இதுகுறித்து சாலமன் நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட வீரமணி மீது கோட்டார், நேசமணிநகர் போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.