வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-18 08:13 GMT
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் வயது (31)திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சதாம் உசேன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பிறகு அவரது குடும்பத்தினர் சதாம் உசேன்னை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சதாம் உசேனை பரிசோதனை செய்து பார்த்து அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.