தலைவலியால் வாலிபர் தற்கொலை
தொடர் தலைவலியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், SIHS காலனி, காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமன் மகன் மோகன் வயது 45. இவரது மனைவி கஸ்தூரி வயது 35. மோகன் கரூர் சின்னான்டாங் கோவில் பகுதியில் உள்ள, பிஎஸ்என்எல் ஆபீஸ் அருகே ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். கரூரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மெயின் கிளையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் மோகனுக்கு அடிக்கடி தலைவலி வருவது வழக்கம். இதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்ட போதும் தலைவலி நிற்கவில்லை. இதனால், விரக்தி அடைந்த மோகன், ஜனவரி 21 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சின்னான்டாங் கோவில் பகுதியில் வசித்து வந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அறிந்த அவரது மனைவி கஸ்தூரி அதிர்ச்சி அடைந்தார். எனவே, இது குறித்து கரூர் மாநகர காவல் துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த மோகனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.