வாலிபர் தற்கொலை
கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் பகுதியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-26 04:44 GMT
தற்கொலை
கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரை சேர்ந்தவர் கர்ணன் மகன் கலைச்செல்வன், 30; மது பழக்கத்திற்கு அடிமையான இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதுபோதையில் அரளி விதையை அரைத்து கலைச்செல்வன் உட்கொண்டார். பாதிக்கப்பட்ட அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.