வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை
பட்டுக்கோட்டை அருகே படித்து விட்டு வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கத்திரிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மகன் ராஜா (வயது35). இவர் இளநிலை பட்டப்படிப்பு (பி பி.ஏ.) படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்து வந்தார். வேலை கிடைக்காததால் கடும் விரக்தியில் இருந்து வந்த அவர், சம்பவத்தன்று பயிருக்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விழுந்த அவரை வீட்டில் விட்டார்.
இதனால் மயங்கி உள்ளவர்கள் உடனடியாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவருடைய மனைவி ராதிகா (வயது 27) பட்டுக்கோட்டை தாலுகா காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.