காவல் ஆணையர் அலுவலகத்தில் வாலிபர் தர்ணா
செயின் பறிப்பு குற்றவாளியிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு வழக்குப்பதிவு செய்யாத வடக்கு காவல் நிலைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட இளைஞர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் எம் எஸ் நகர் மதுபான கூடத்தில் கடந்த 15ஆம் தேதி தினேஷ் என்பவர் மது அருந்தி உள்ளார் ,மது அருந்திவிட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் அம்பேத்கர் காலனி பகுதியில் சென்றபோது உடன் வேலை பார்த்த சிவா என்பவர் இவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி நலம் விசாரித்து மது அருந்த போகலாம் என கூறியுள்ளார். இதற்கு தினேஷ் ஏற்கனவே நான் மது போதையில் இருப்பதால் வேண்டாம் என மறுத்துள்ளார். அதற்கு அவர் நைசாக பேசி மீண்டும் மது அருந்துவதற்கு அருகில் உள்ள மதுபான கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்,
அப்போது தினேஷ் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை கழற்றி தரும்படி கேட்டுள்ளார்,செயினை பார்த்துவிட்டு தருகிறேன் என கூறி அதனை வாங்கி பார்த்த சிவா, திடீரென நான் சிறுநீர் கழித்து விட்டு வருவதாக கூறி வெளியேறி உள்ளார்,நீண்ட நேரம் ஆகியும் சிவா திரும்ப வராததால் தன்னை ஏமாற்றி விட்டு தங்க ஜெயினுடன் சென்றுவிட்டார் என்பதை அறிந்த தினேஷ் அருகில் இருந்த பகுதிகள் எல்லாம் தேடி பார்த்து உள்ளார்,இந்த நிலையில் சிவா ஜெயினுடன் தப்பி சென்றதால்,பாதிக்கப்பட்ட தினேஷ் என்பவர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
போலீசார் சி எஸ் ஆர் பதிவு கூட செய்யாமல் செயினை திருடி சென்ற பழைய குற்றவாளியான சிவாவுடன் உடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசார் குமரகுரு என்பவர் அவரைக் காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டுள்ளார். இந்த ஜெயினை திருடி சென்ற சிவாவை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர் மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ் என்பவர் மீண்டும் மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்று தனது செயினை மீட்டுத் தரும்படி கேட்டுள்ளார்,இதனை விசாரித்த போலீசார் சிவா உடன் நட்புடன் இருந்ததால் இருவரையும் வரவழைத்து காவல் நிலையம் என்பதை மறந்து பத்திரப்பதிவு அலுவலகம் போல 100 ரூபாய் பத்திரத்தில் செயினை திருப்பி தருவதாக சிவாவிடம் எழுதி தந்துள்ளனர்.
இதுவரை தனக்கு சிவா செயினை வழங்காததால் பாதிக்கப்பட்ட தினேஷ் என்பவர் குடும்பத்துடன் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் முன்புறம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை அறிந்த பாதுகாப்புக்கு இருந்த போலீசார் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை அழைத்து மனுவுடன் சென்று புகார் தெரிவிக்கும் படி உள்ளே அனுப்பி வைத்தார். செயினை பறிகொடுத்த நபர் குடும்பத்துடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது