மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
ஆரணி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
Update: 2024-06-03 16:35 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த துரை முருகன் (வயது 22)அறுவடை எந்திர டிராக்டரில் டிரைவராக வேலை செய்து வந்தார். மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.