தவறி விழுந்த சிறுவன் பலி

ஆரணியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-02 10:20 GMT
பெண் பலி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மகன் மோத்தீஸ் (வயது 8), 3-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது கால் தவறி கீழே விழுந்தான். இதில் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்த புகாரின் பேரில் ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News