அரசு பேருந்து மோதி இளைஞர் பலி
அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூங்கில்பட்டியை சேர்ந்த அழகு பாண்டி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி.;
Update: 2024-03-19 05:53 GMT
இளைஞர் பலி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஏரக்காபட்டி பகுதியில் (மார்ச் 18) இன்று காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூங்கில்பட்டியை சேர்ந்த அழகு பாண்டி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.