பரமத்தி வேலூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி.

பரமத்தி வேலூர் அருகே திடிரென நிறுத்தப்பட்ட சரக்கு ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். சரக்கு ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.;

Update: 2024-05-28 09:15 GMT

சாலை  விபத்து (பைல் படம்)

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, பள்ளிபாளையம், அம்மன் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் (33). இவர் கோவை மாவட்டம் அவினாசியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை பரமத்திவேலூரில் உள்ள தனது உறவினர் வீட்டின் இறுதிச் சடங்கிற்கு வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல பரமத்திவேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது  முன்னாள் சென்று கொண்டிருந்த  சரக்கு ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டு சாலையின் நடுவே நிறுத்தியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக சரக்கு ஆட்டோவின் பின்னால் மணிவண்ணன் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதில் அவர் கீழே விழுந்து தலையில் பலத்த அடுபட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளார்.

Advertisement

இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை  காப்பாற்றி நாமக்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சையாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் மணிவண்ணன்  வரும் வழியிலேயே  இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து  விபத்தை ஏற்படுத்திய திருச்செங்கோடு தாலுகா, வெப்படை அருகே உள்ள எலந்தகுட்டையை பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் முருகனை (32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News