இருசக்கர வாகனம் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
பென்னாகரம் அருகே சாலையோர கல்லில் இருசக்கர வாகனம் மோதியதில் தடுமாறி விழுந்து காயமடைந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
Update: 2024-02-20 08:14 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியதும்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சிவா இவர் பெங்களூருவில் பழைய பேப்பர் கடை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மாலை, வீட்டில் இருந்து பெங்களூருவுக்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். காசம்பட்டி சாலை கோணகுண்டுபள்ளம் கிரிக்கெட் மைதானம் அருகே சென்ற போது, சாலையோர கல்லில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த சிவா படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவம் னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பென்னாகரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.