கூலித்தொழிலாளி வாலிபர் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காதல் விவகாரம் காரணமாக நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவரை கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசிசென்றவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்;

Update: 2023-12-30 11:28 GMT

கூலித்தொழிலாளி வாலிபர் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை

சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட புள்ளாகவுண்டம்பட்டி அருகேயுள்ள சடையம்பாளையம் பகுதியை சேர்ந்த வேணுகோபால் கூலி தொழிலாளியான இவர் கடந்த வியாழக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இந்நிலையில் இன்று அதிகாலையில் தேவூர் காவல் நிலையத்திற்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆபரகான் என்ற இளைஞர் தானும் தனது நண்பர்களும் குடிபோதையில் கூழிதொழிலாளி வேணுகோபாலை கல்லால் தாக்கி கொலை செய்து புள்ளா கவுண்டம்பட்டி அக்ரஹாரம் கிழக்குக்கரை கால்வாயில் வீசி விட்டதாக தேவூர் காவல் நிலையத்தில் சரணடைந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

Advertisement

இதனால் அதிர்ச்சி அடைந்த தேவூர் போலீசார் உடனடியாக சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளர் தேவிக்கு தகவல் அளித்து அவரது தலைமையில் புள்ளா கவுண்டம்பட்டி பகுதி கிழக்குக்கரை கால்வாயில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்த வேணுகோபாலின் சடலத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின்னர் விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் மழைக்கு உடனடியாக இருந்த நண்பர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News