மாட்டு பண்ணைக்கு தடை கோரி நகராட்சி அலுவலகம் முன் வாலிபர் போராட்டம்.

நகராட்சி உத்தரவை மீறி செயல்பட்டு வரும் மாட்டு பண்ணை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன் வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-26 04:57 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் டேவிட் ராஜ்

கொல்லங்கோடு அருகே அணுக்கோடு பகுதியை சேர்ந்தவர் டேவிட் ராஜ். இவரது வீட்டு அருகே விஜயன் என்பவர் மாட் டுப்பண்ணை துவக்கினார். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், அனுமதிக் கக்கூடாது என கொல்லங்கோடு நகராட்சியில் டேவிட்ராஜ் புகார் அளித்தார்.இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பொதுமக்கள் தரப்பில் ஆட்சேபம் இல்லா சான்றிதழை பெற்று நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்த பின், மாட்டுப் பண்ணையை நடத்தும்படி நோட்டீஸ் ஒட்டினர்.

ஆனால் இதைக் கண்டு கொள்ளாத தொடர்ந்து விஜயன் பண்ணை நடத்தி வந்தார். இதனை கண்டித்தும் மாட்டுப் பண்ணைக்கு உடனடியாக தடை விதிக்க கோரியும் நகராட்சி அலுவலகம் முன் நேற்று இரவு டேவிட்ராஜ் தனி ஆளாக போராட்டம் நடத்தினார். அவரிடம் கொல்லங்கோடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.இது பற்றி எழுத்துப் பூர்வமாக புகார் தந்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.இதையடுத்து டேவிட் ராஜ் போராட்டத்தை கைவிட்டார். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News