மணல் கடத்திய வாலிபர் கைது!
கண்ணமங்கலத்தில் அத்துமீறி ஆற்று மணலை கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரையும் கைது செய்தனர்.;
Update: 2024-05-04 06:43 GMT
கண்ணமங்கலத்தில் அத்துமீறி ஆற்று மணலை கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரையும் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் கண்ணமங்கலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் .அப்போது புதுப்பாளையம் பகுதி வழியாக மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டர் வந்தது. இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.