தரமற்ற சாலை என புகார் - வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது
சாலையை சேதப்படுத்தியதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த புகாரில் கைது;
Update: 2023-11-30 03:47 GMT
தரமற்ற சாலை என வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது
இளையான்குடி அருகே உள்ள பிராமணக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் விக்னேஸ்வரன். இவர் அதே பகுதியில் உள்ள பேருந்து நிலையம் முதல் வைகை ஆறு வரை செல்லும் தார் சாலை தரமானதாக அமைக்கப்படவில்லை எனக் கூறி தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் புதிதாக போடப்பட்ட சாலை தரமற்று உள்ளதாக தெரிவித்து பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து சாலையை சேதப்படுத்தியதாக வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் போலீசார் கார்த்திகேயன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்