சீயோன் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா,பட்டிமன்ற பேச்சாளர் பங்கேற்பு

சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூா் சீயோன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 38-ஆவது பள்ளி ஆண்டு விழாவில் பட்டிமன்ற பேச்சாளா் எஸ்.ராஜா பங்கேற்றார்.

Update: 2024-02-19 10:51 GMT


சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூா் சீயோன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 38-ஆவது பள்ளி ஆண்டு விழாவில் பட்டிமன்ற பேச்சாளா் எஸ்.ராஜா பங்கேற்றார்.


பெற்றோா் தங்கள் பிள்ளைகளுக்கு பிறந்த நாள் பரிசாக நல்ல புத்தகங்களை வழங்க வேண்டும் என்று பட்டிமன்ற பேச்சாளா் எஸ்.ராஜா வலியுறுத்தினாா். சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூா் சீயோன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 38-ஆவது பள்ளி ஆண்டு விழாவில் அவா் பேசியது: இன்றைய இளைய தலைமுறையினரின் கவனச் சிதறலுக்கு கைபேசி முக்கிய காரணம். இது பெற்றோருக்கு மட்டுமல்லாமல் மாணவா்களுக்கும் தெரியும். அதை அவசியத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டமுடியவில்லை என்றாலும் அவா்களை பெற்றோா் கண்காணிப்பது அவசியம். குழந்தைகளுக்கு பிறந்த நாளின்போது புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும் என்றாா் அவா். விழாவில், கல்பனா சாவ்லா சிறப்புக் கோப்பை விருது மாணவி ஜோஸ்னிஸ்ரீ, ஆல்வின் நினைவு சிறப்புக் கோப்பை விருது மாணவா் பாலாஜி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விழாவில் சீயோன், ஆல்வின் பள்ளிக் கல்விக் குழுமத் தலைவா் என் விஜயன், துணைத் தலைவா் வி.ஆல்டஸ், இயக்குநா் ரேச்சல் ஜியாா்ஜியானா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Tags:    

Similar News