நாய் கடித்து காயமடைந்த ஆடுகளை பார்வையிட்ட கால்நடை மண்டல இயக்குனர்
நாய் கடித்து காயமடைந்த ஆடுகளை கால்நடை சேலம் மண்டல இயக்குனர் பார்வையிட்டார்;
By : King 24X7 News (B)
Update: 2023-12-04 14:57 GMT
ஆடுகளை பரிசோதித்த இயக்குநர்
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மேல் சித்தூர் கிராமத்தில் ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை வெறி நாய் கடித்ததில் எட்டு ஆடுகள் இறந்து விட்டது.
பத்துக்கு மேற்பட்ட ஆடுகள் காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கால்நடை பராமரிப்பு துறை, சேலம் மண்டல இணை இயக்குனர் பாபு, சங்ககிரி கோட்ட உதவி இயக்குனர் முத்துக்குமார், எடப்பாடி கால்நடை மருத்துவர் அருள் பிரகாஷ் ராஜ் ஆகியோர் காயம் பட்ட ஆடுகளை நேரில் சென்று பார்வையிட்டனர் காயம் பட்ட ஆடுகளுக்கு சக்திவேல்குமார் சிகிச்சை அளித்தார்.