கோரிக்கையை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-26 11:51 GMT

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆர்ப்பாட்டம் 

மல்லசமுத்திரத்தில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக நடந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் செந்தில்வடிவு வரவேற்புரையாற்றினார். இதில், திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் தவறான தணிக்கை தடையினை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். தணிக்கை பிரிவு அலுவலர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டுள்ள 99 ஆசிரியர்களை பாதுகாத்திட வேண்டும். மூத்தோர்- இளையோர் ஊதிய முரண்பாடு கலைந்திடும் வகையில் நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் செயல்முறைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள மூன்று ஆசிரியர்களை பாதுகாக்க வேண்டும். தவறான தணிக்கை தடையால் பாதிக்கப்பட்டு அரசு கணக்கிற்கு செலுத்தியுள்ள பணி நிறைவு ஆசிரியர்களுக்கு பல லட்சக்கணக்கான ரூபாயை திரும்ப வழங்க வேண்டும். ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து தனி ஊதியம் மற்றும் சிறப்புப்படி அனுமதிக்க வேண்டும். கூட்டு அமர்வு கூட்டம் விரைந்து கூட்ட வேண்டும். தவறான தணிக்கை தடைக்கு நிவர்த்தி காணும் அலுவலகம், அலுவலர் விவரம் விரைந்து வெளியிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மதிப்பு தலைவர் ஆசைத்தம்பி, மாநில பொருளாளர் முருகசெல்வராசன், மாவட்ட செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் ரவி மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், முரளிதரன், வேல்முருகன், கணபதி, சரஸ்வதி, மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் பிரபு, மகளிர் அணி அமைப்பாளர் பாரதி, ஒன்றிய பொருளாளர் சண்முகசுந்தரம் உள்பட 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News