பாஜக சார்பில் தீன்தயாள் உபாத்யாயா பிறந்தநாள்
தீன்தயாள் உபாத்யாயா பிறந்தநாள்
நாமக்கல் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி நாமக்கல் கிழக்கு மாவட்டம் ராசிபுரத்தில் டாக்டர் கே.பி.ராமலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் மற்றும் பெருங்கோட்ட பொறுப்பாளர் அவர்கள் தலைமையில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா 107வது பிறந்தநாள் விழாவை அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து நிர்வாகிகளுக்கு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.இந்த நிகழ்வில் மாநில பொது குழு உறுப்பினர், கதிரேசன், மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.டி. இளங்கோ, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் சம்பத்குமார், நகர துணை தலைவர் குமார், நகர பொருளாளர் ராஜா, மகளிர் அணி துணை தலைவி பிரேமா, நெசவாளர் நகர தலைவர் கணேசன், இளைஞர் அணி தலைவர்நாகராஜ், சிறுபான்மையினர் அணி அலாவுதீன், ராசிபுரம் துளசிராமன், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.