மருத்துவ காப்பீட்டில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு சான்றிதழ்
மருத்துவர்களுக்கு சான்றிதழ்
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கும் நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், நகரமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினருமான எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, துணைத் தலைவர் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் பிரபாகரன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.