இ சேவை மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி

Update: 2024-09-12 05:20 GMT

ஆர்கே பேட்டை வட்டாட்சியர் அலுவலக இ சேவை மையம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆர்கே பேட்டை, செப் 12: திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இ சேவை மையம் மற்றும் ஆதார் மையம் உள்ளது.

இந்த மையத்திற்கு நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்காகவும், ஆதார் அட்டையில் பிழை திருத்தம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இங்கு வந்து செல்கின்றனர்.




 

ஆனால் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்லும் இந்த மையத்தில் மின்விசிறி கூட இல்லாத நிலையே உள்ளது. அதே நேரத்தில் சேவை மையத்திற்கு வரும் பொதுமக்கள், குழந்தைகளுடன் தாய்மார்கள், முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு இருக்கைகள் ஒன்று கூட இல்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்காகின்றனர்.

Advertisement


 



இந்த இ சேவை மையம் திறந்தநாள் முதல் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாதது குறித்து பலமுறை அதிகாரியிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News