சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களின் விபத்து குறித்து வெளியான சிசிடிவி காட்சி
ஓட்டுநர் வேண்டும் என்றே தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியில் சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30 நாட்களாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்திற்கு வரும் ஊழியர்கள் சுங்குவார்சத்திரம் அருகே நடந்து வந்து கொண்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த டாட்டா ஏஸ் வாகனம் வழியிலேயே நிறுத்தி நான் அந்த வழியாக தான் செல்கிறேன் நீங்கள் வருகிறீர்களா என்று கேட்டு வலுக்கட்டாயமாக 13 பேரை ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த டாட்டா ஏஸ் வாகனம் சாம்சங் தொழிற்சாலை அருகே வரும் பொழுது அந்த டாட்டா ஏஸ் வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை மிகவும் வேகமாக தாறுமாறாக இயக்கியுள்ளார். அப்பொழுது samsung நிறுவனத்தின் தடுப்பு சுவரில் மோதி டாட்டா ஏஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதில் 13 பேர் பலத்த காயம் அடைந்து தற்போது ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு சிலர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதற்கான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்