நல்ல தண்ணி குளத்தை சீரமைக்க போது மக்கள் கோரிக்கை

நல்ல தண்ணி குளத்தை சீரமைக்க போது மக்கள் கோரிக்கை

Update: 2024-10-28 06:33 GMT

நல்ல தண்ணி குளத்தை சீரமைக்க போது மக்கள் கோரிக்கைநல்ல தண்ணி குளத்தை சீரமைக்க போது மக்கள் கோரிக்கை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றியம் கோபாலபுரம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சியில் உள்ளது நல்ல தண்ணி குளம். இந்த குளத்து நீரை கிராம மக்கள் குடிநீராகவும் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த குளம் போதிய பராமரிப்பில்லாததால் செடி கொடிகள் அதிக அளவில் வளர்ந்து குளம் பாழடைந்து கிடக்கிறது.

மேலும் தற்போது பெய்த மழையால் குளம் நிரம்பி அதிலிருந்து வெளியேறும் உபரி நீரானது குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது மற்றும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.


மேலும் குடிநீருக்காக போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து பெறப்படும் நீரும் மாசடைந்து இருப்பதால் தண்ணீரை உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தும் நல்லான் குளம் பாழடைந்து இருப்பதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News