அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள மின்மாற்றியை இடம் மாற்ற கோரிக்கை.
அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள மின்மாற்றியை இடம் மாற்ற கோரிக்கை.
By : Chennai King 24x7
Update: 2024-10-29 11:33 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வீரமங்கலம் ஊராட்சி வீரமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்,படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம் மிக அருகில் மின்மாற்றி ஒன்று உள்ளது.
அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் வளாகத்தில் உள்ள மின்மாற்றி அருகே விளையாடி வருவதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அந்த மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்