சேந்தமங்கலத்தில் வேன் கவிழ்ந்து விபத்து 10 பேர் காயம்
சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் அருகே சென்னை, கன்னியாகுமரி தொழில்வழி தடத்தின் சாலையில் நாமக்கல்லில் இருந்து ஆத்தூருக்கு கலை நிகழ்ச்சிக்கு சென்ற டிராவல்ஸ் வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
சேலத்தை சேர்ந்த டிரைவர் செல்வம், (50) என்பவர் டிராவல்ஸ் வேனில் நாமக்கல்லில் இருந்து ஆத்தூருக்கு கலை நிகழ்ச்சிக்கு செல்ல 15 நடன கலைஞர்களை ஏற்றி கொண்டு சென்னை, கன்னியாகுமரி தொழில்வழி தடத்தின் சாலையில் சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது டிராவல்ஸ் வேனின் வலது புற பக்கத்தின் பின் டயர் வெடித்து வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
விபத்தில் நாமக்கல், சேலம், பெங்களூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் செல்வம், சுரேஷ். (31), சங்கீதா. (26), மது. (29) ரம்யா (23), ஜீவானந்தம். (27), ரத்தனம். (31), காமேஷ். (21), தமிழ், (44) உட்பட 10 நடன கலைஞர்களுக்கு கை, கால், உடல் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேந்தமங்கலம், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை, கன்னியாகுமரி தொழில்வழி தடத்தின் சாலையில் டிராவல்ஸ் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.