மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்
Update: 2023-07-21 09:31 GMT
திருச்செங்கோடு சட்டமன்றத்திற்கு உட்பட்ட மல்லசமுத்திரம் ஒன்றியம் மற்றும் பேரூர் பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் நாமக்கல் மாவட்ட அ.தி.மு.கழக செயலாளர் பி.தங்கமணி எம்.எல்.ஏ தலைமையில் அதிமுகழகத்தில் இணைந்தனர்.
உடன் முன்னாள் அமைச்சர் மருத்துவர் வெ. சரோஜா, பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர், திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி, மல்லசமுத்திரம் ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.