சேலம் மாநாட்டுப் பணிகளுக்கு ரூ.1 கோடி நிதி
உதயநிதி ஸ்டாலினிடம் மதுரா செந்தில் வழங்கினார்;
Update: 2023-08-05 10:30 GMT
உதயநிதி ஸ்டாலினிடம் மதுரா செந்தில் நிதி
வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களின் பங்கேற்புடன் DMK Youth Wing இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டுப் பணிகளுக்காக நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம், மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் வழங்கினார்.