ராசிபுரத்தில் திருட்டு வழக்கில் மூவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை

Update: 2023-08-22 05:09 GMT

கடுங்காவல் தண்டனை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பதிவு செய்த திருட்டு வழக்கு சம்பந்தமாக ரப்பர் (எ) ஜெயக்குமார் (23), சண்முகம் (37), விஜய் (எ) சைக்கோ (21) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது இவ்வலகில் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர் ஹரிஹரன் மேற்படி குற்றவாளிகள் மூவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 2000 அபராதம் ஆகியவற்றை தண்டனையாக வழங்கினார்.

மேற்படி வழக்கில் வழக்குபதிவு செய்து சிறப்பாக புலன்விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்து சிறப்பாக செயல்பட்ட ராசிபுரம் உதவி கயல் ஆய்வாளர் தங்கம் மற்றும் காவலர்களை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ்கண்ணன் பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News