மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியில் 77வது சுதந்திர தினவிழா
Update: 2023-08-16 06:42 GMT
மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியில் 77வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளித்தலைவர் பெ.ந.பழநிச்சாமி தேசியக் கொடியினை ஏற்றினார். பள்ளியின் முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு விடுதலைக்காக இன்னுயிர் அளித்தவர்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார். பள்ளியின் நிர்வாகக்குழு இயக்குநர்கள் சுந்தரவதனம், துரைசாமி, கார்த்திகேயன், வினோத்குமார், தாளாளர் செல்லமுத்து ஆகியோர் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டி, மாணவர்கள் சுதந்திர தினத்தின் சிறப்பைப் பற்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசினர்.
மூவர்ணக் கொடியின் சிறப்பை விளக்கும் நடனமும் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை விளக்கும் நடனமும் மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டது.. பள்ளியின் முதல்வர் கணேஷ் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்தினைத் தெரிவித்தார்.