குமாரபாளையம் புறவழிச்சாலை பள்ளத்தில் விழுந்த கார்

Update: 2023-09-25 05:40 GMT

குமாரபாளையம் அருகே புறவழிச்சாலையில் உள்ள சாலையோர பள்ளத்தில் கார் விழுந்தது.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை உள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரவு பகலாக ஓடிக் கொண்டுள்ளது. சாலையின் ஓரம் அதிக இடங்களில் பள்ளம், மேடாக உள்ளது. இதனால் கனரக வாகனங்களுக்கு வழிவிட டூவீலர் ஓட்டுனர்கள் சாலையை விட்டு கீழே இறங்க முடியாத நிலை உள்ளது. இதனை சரி செய்ய பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. நேற்று முன்தினம் இரவு குமாரபாளையம் அருகே ரெட்டியார் டீக்கடை அருகே சாலையோரம் வெட்டப்பட்ட பள்ளத்தில் வேகமாக வந்த போர்டு கார் பள்ளத்தில் விழுந்தது. இதில் வந்த கார் ஓட்டுனர் மயக்க நிலையில் இருந்ததால், வழியில் சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச் அனுப்பி வைத்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். புறவழிச்சாலையில் இந்த பள்ளங்கள் எதற்காக உள்ளது எனயாருக்கும் தெரியாத நிலையில் உள்ளது. கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுவதால், அந்த பகுதியில் சாலையோர மரங்கள் தினமும் பொக்லின் மூலம் வெட்டப்பட்டு வருகிறது. ஆனால் நேற்றுமுன்தினம் விபத்து நடந்து கார் பள்ளத்தில் விழுந்த இடத்தில் எதற்காக பள்ளம் உள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது. இங்கு சாலையோரம் பள்ளம் உள்ளது என்று எவ்வித சிக்னலும் இல்லை. தடுப்புகள் அமைக்கப்படவில்லை. இவ்வழியாக புதிதாக வருபவர்களுக்கு இங்கு பள்ளம் உள்ளது என்பது எப்படி தெரியும்? இரவு நேரங்களில் இது போன்ற இடங்களில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டிய தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News