குடியிருப்பு பகுதியில் உலா வரும் ஒற்றை புலி.!
குடியிருப்பு பகுதியில் உலா வரும் ஒற்றை புலி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
By : King 24x7 Website
Update: 2023-10-29 06:45 GMT
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ள நிலையில் கிராமத்தை சுற்றி உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்கார வன பகுதியில் சுற்றி தெரியும் ஒற்றை புலி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த புலி கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் 10 மாடுகளை அடித்து கொன்றுள்ளது. மேலும் இரவு நேரங்களில் வீடு வீடாக செல்ல தொடங்கியுள்ளது. குறிப்பாக வாழைத்தோட்டம், சொக்கநல்லி, கோப்பரக்கடவு, சீகூர் பாலம் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் சுற்றி தெரியும் இந்த புலியால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து புலி எதனால் குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது? என்பதை கண்டறிய சிங்காரா வனத்துறையினர் 10 இடங்களில் தலா இரண்டு நவீன கேமராக்கள் விதம் பொருத்தி கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர். இதனிடையே அந்த புலி மனிதர்களை தாக்கும் முன்பு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.