சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்
சேலம் மாவட்டம் ஓமலூர் பஞ்சு காளி பட்டியை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஜெயக்குமார் ௨௨ சேலம் மாவட்டம் சங்ககிரி இளம்பிள்ளை அடுத்துள்ள இடங்கசாலை மொட்டூர் பகுதியை சேர்ந்த லாவண்யா வயது 22. இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், ஜெயக்குமார் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் லாவண்யாவின் பெற்றோர் காதல் விவகாரம் அறிந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து,வேறு ஒரு இடத்தில் திருமண ஏற்பாடுகளை செய்ததால் பள்ளி பாளையத்தில் உள்ள ஜெயக்குமாரின் உறவினர் திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பு நிர்வாகி முத்துப்பாண்டி தலைமையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.... இந்நிலையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் காதல் ஜோடியினர் தஞ்சம் அடைந்த நிலையில் , இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி போலீசார் சமரசம் செய்து வைத்து மணமக்களை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்..... சாதி மறுப்பு திருமணம் செய்த மணமக்களுக்கு பாதுகாப்பாக காவல் நிலையத்தில் திரண்ட திராவிடர் கழக அமைப்பு நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.